முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர்கள் பலர் தமிழக அரசியல் குறித்து விமர்சிப்பது மட்டும் இன்றி நேரடியாக அரசியலிலும் ஈடுபட தொடங்கியுள்ளார்கள்.
அரசியலுக்கு வர மாட்டேன், என்று சொல்லிக் கொண்டிருந்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்ட நிலையில், அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், இன்னும் தனது கட்சி பெயரை அறிவிக்கவில்லை. இதற்கிடையே நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். இவர்கள் மட்டும் இன்றி, பல நடிகர் நடிகைகள் கமல் மற்றும் ரஜினியின் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினி, கமல் வழியில் மற்றொரு பிரபல நடிகரும் அரசியல் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் தான் நடிகர் பார்த்திபன்.
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சென்னையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசும் போது, அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன், என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...