போலியான பாண்டிச்சேரி முகவரியை கொடுத்து சொகுசு கார் வாங்கிய நடிகை அமலா பால், மீது குற்றம் சாட்டிய கேரல குற்றப்பிரிவு போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நேரில் ஆஜரான நடிகை அமலா பால், கேரள படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள வாடகைக்கு வீடு எடுத்திருப்பதாகவும், அந்த விலாசத்தை வைத்தே பாண்டிச்சேரி பதிவில் சொகுசு கார் வாங்கியதாகவும் கூறினார்.
ஆனால், அமலா பால் தாக்கல் செய்த விபரங்கள் அனைத்தும் போலியானவை என்பதை கண்டுபிடித்த போலிஸார், அமலா பாலை கைது செய்து உடனடியாக ரிலீஸ் செய்தனர். இதற்கிடையே, தனக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, அமலா பால் சென்னை தி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தால் அவரது சொகுசு கார் விவகாரம் காணாமல் போய்விட்டது.
இந்த நிலையில், சொகுசு கார் வாங்கிய வழக்கு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக அமலாபால் உள்பட 3 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளார்களாம்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...