சிவாஜியின் ‘மனோகரா’ படத்தை மட்டும் அல்ல அப்படத்தில் சிவாஜியுடன் நடித்த பல நடிகர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களில் ஒருவர் தான் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கிரிஜா. ‘திரும்பி பார்’, ‘இரு சகோதரிகள்’ என தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த இவர் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவரது மகள் சலீமா, தமிழில் அறிமுகமாகிறார்.
தனது அம்மாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் அம்மாவிடம் படப்பிடிப்பு குறித்து கேட்டு தெறிந்துக் கொல்வது என சிறு வயதில் இருந்தே சினிமா மீது பேராரர்வம் கொண்டவரான சலீமா, மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்ததோடு, 150 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். பிறகு ‘யான் பிறந்த நாட்டில்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், பல மலையாளப் படங்களில் நடித்ததோடு, ‘நகசதங்கள்’ என்ற மலையாளப் படத்தில் டம் அண்ட் டப்பாக நடித்து பெரும் பாராட்டு பெற்றார். இந்த படத்தின் மூலம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அப்போது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இப்படி தொடர்ந்து பல மலையாளப் படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்திருக்கும் சலீமா, ‘நெல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கிரமாத்து பின்னணியைக் கொண்ட இப்படத்தில் அமைதியான கிராமத்து பெண் வேடத்தில் அனைவருக்கும் உதவி செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் சலீமா நடித்திருக்கிறார்.
இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கும் சலீமா, அக்கா, அம்மா, வில்லி என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிரார். மலையாளத்தில் பிஸியாக இருந்த போது தமிழ் சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்தாத இவர், தற்போது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.
அப்படியானால், சரண்யா பொன்வன்னனுக்கு போட்டி வந்தாச்சு!
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...