மக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழில் 2017 ஆம் தொடங்கிய நிலையில், தற்போது அப்போட்டியின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
டிவி பார்க்காத பழக்கம் உள்ளவர்களையும் டிவி முன்பு உட்கார வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சி, ஏற்கனவே திட்டமிட்டு நடத்தும் ஒரு நிகழ்ச்சி என்றும், நிகழ்ச்சியில் நடக்கும் சண்டைகள் உள்ளிட்ட அனைத்தும் ஸ்கிரிப் தான் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், நிகழ்ச்சி மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எவ்வளவு செலவு செய்து எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஸ்டுடியோ செட்டிங் செலவு ரூ.20 கோடி, நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ரூ.20 கோடி, மற்ற 16 பேருக்கு ரூ.42 கோடி, 100 நாள் படப்பிடிப்புச் செலவு ரூ.25 கோடி, முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ரூ.3 கோடி, என மொத்தமாக இந்த நிகழ்ச்சிக்காக ரூ.110 கோடிகள் செலவு செய்யப்படுகிறதாம்.
அதே சமயம், விளம்பரம், ஸ்பான்சர் உள்ளிட்ட பல வகையில் இந்த 100 நாட்களில் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் குழுவினர் ரூ.1140 கோடி சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...