ஏ.எம்.என் குளோபல் குரூப் குழுவானது, ஏ.எம்.என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி ’ஸ்கூல் கேம்பஸ்’ என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.
ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் டாக்டர். ஆர்.ஜே.ராமநாராயணா இந்த படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஸ்ரீ சந்தோஷ் குமார் மால் ஐ.ஏ.எஸ் (மாவட்ட ஆட்சியர்) அவர்களால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.
பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபு அவர்களின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் மற்றும் படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.மேலும் பிரபல பாடகர்கலான ஆஷா போஷ்லே, தென்னிந்திய கான சரஸ்வதி எஸ்.சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் மற்றும் ஹேவ்லாக் தீவுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றுவருகிறது.
படத்தின் நாயகர்களாக நடித்துள்ள ராஜ்கமல் , கஜேஷ் நாகேஷ் ஆகியோர்களுக்கு ஜோடியாக கீர்த்தி, மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் ''கலைமாமணி" டெல்லி கணேஷ் ,மதன் பாப் ,ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்திய கல்விமுறைக்கும் வெளிநாட்டு கல்விமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை உள்ளடக்கிய படமாக இந்த ஸ்கூல் கேம்பஸ் திரைப்படம் அமையும்.
டாக்டர். ஆர்.ஜே.ராமநாராயணா இயக்கி, தயாரித்து மின்னல் வேகத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...