சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் இவர்களது குடும்ப வாழ்க்கை என்பது அவ்வளவு வெற்றிக்கரமாக அமைவதில்லை.
பல நடிகர் நடிகைகள் திருமணமான ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணும், அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு அகிரா என்ற மகன் இருக்கிறார்.
தற்போது ரேணு தேசாயுடன் வளரும் அகிராவை, பலர் ஜூனியர் பவர் ஸ்டார் என அழைக்கிறார்களாம். ஆனால், இதை விரும்பாத ரேணு தனது மகனை தயவு செய்து யாரும் அப்படி அழைக்க வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இது போல செய்து வந்தால் அவை நீக்கப்படும். இல்லையெனில் துண்டிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரேணு தேசாய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை மறுத்திருக்கும் ரேணு தேசாய் அது வெறும் வதந்தி மட்டுமே, என்று கூறியதோடு இப்போதை திருமணம் குறித்து தான் எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...