கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2, முதல் பாகத்தைப் போல இன்னும் சூடு பிடிக்கவில்லை என்றாலும், நிகழ்ச்சி குழ்வினரின் சூடேற்றலால் ரசிகர்கள் பெரும் ஷாக்காகியுள்ளார்கள்.
பிக் பாஸ் 2 போட்டியாளர்களில் காமெடி நடிகர் செண்ட்ராயனும் ஒருவர். வெகுளித்தனமான இவர் பேசுவது சில நேரங்களில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை கோபமடைய செய்துவிடுகிறது.
இந்த நிலையில், நடிகை முதாஜுடன் செண்ட்ராயன் நடனமாடிவிட்டு எதையோ சொல்ல, அதற்கு மும்தாஜ் அழத் தொடங்கிவிடுகிறார். உடனே கோபப்படும் சக போட்டியாளர்கள் சென்ராயனை வீட்டை விட்டு வெளியே துறத்துகின்றனர்.
இப்படி வெளியாகும் புரோமோ வீடியோவால், செண்ட்ராயன் மும்தாஜை என்ன செய்தார், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பிக் பாஸ் முதல் பாகத்தில் நடிகர் பரணியும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...