தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல பழம்பெரும் நடிகர்களுடன் நடித்த அனுபவம் உள்ள நடிகைகளில் முக்கியமானவர் குட்டி பத்மினி. நடிப்பது மட்டும் இன்றி, தயாரிப்பு, இயக்கம் என்று பல திறமைகளைக் கொண்ட இவர், சின்னத்திரையிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டியவர்.
தற்போதும் சீரியல்களில் பிஸியாக இயங்கி வரும் குட்டி பத்மினி, கில்டு சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், சிறை கைதிகளின் நல்வாழ்விற்காக குட்டி பத்மினி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை செய்து வருகிறாராம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...