விஜயின் 62 வது படமான ‘சர்கார்’ படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று வெளியிடப்பட்டது. இதில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்திற்கும் உள்ளானது.
இந்த நிலையில், விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படத்தோடு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ”நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன். அந்த சிகரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது, நடிகைகள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் இனி தான் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன், என்று பேட்டியளித்திருந்தார்.
ஆனால், தற்போது தனது வாக்குறுதியை மறந்த விஜய், புகைப்பிடிப்பது போல போஸ் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...