Latest News :

டிவியை தொடர்ந்து சினிமாவிலும் இணைந்த மதுரை முத்து - தேவதர்ஷினி
Friday June-22 2018

மகாகவி திரைக்களஞ்சியம்  வெர்லிங்டன் பாரதியார் பெருமையுடன் வழங்க, தளபதி ஈஸ்வரன் நல்லாசியுடன்  பர்ஸ்ட் லுக் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ரோஜா மாளிகை’.

 

அமரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஊர்வசி வத்ராஜ் அறிமுகமாகிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, மதுரை முத்து, பாண்டு, கராத்தே ராஜா, கொட்டாச்சி, ரேஷ்மா சுகி நாயக்கர், தேவிஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள்.    இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் நடிக்கிறார்.

 

மகிபாலன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோ இசையமைக்க, சுந்தர், நாகி பிரசாத் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். கிரண் நடனம் அமைக்க, பிரின்ஸ் கலையை நிர்மாணிக்கிறார். இணை தயாரிப்பை இ.பிரேம்குமார் கவனிக்க, படத்தை தயாரிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கெளதம் இயக்கவும் செய்கிறார்.

 

Roja Maligai

 

இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியதுடன் பல படங்களை விநியோகம் செய்துள்ளார். அத்துடன் கார்த்திக் - கௌசல்யா நடித்த ’முதலாம் சந்திப்பில்’ என்ற படத்தையும் தயாரித்து உள்ளார். 

 

இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் கூறுகையில், “இது காமெடி கலந்த ஹாரர் படம். ஐம்பது நாட்கள் முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது.                          

அமரன் – ஊர்வசி வத்ராஜ் இருவரும் ஐடி துறையில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். திருமணம் நடந்த பிறகு வெளிநாட்டிற்குப் போய் செட்டிலாக ஏற்பாடு நடக்கிறது.  திருமண பரிசாக ஊர்வசியின் தாத்தா ஊட்டியில் மிகப்பெரிய மாளிகையை எஸ்டேட்டுடன் பரிசளிக்கிறார். அங்கே போய் தங்கும் அந்த இளம் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் தான் படத்தின் திரைக்கதை.

 

ஜாலியான அதே நேரம் பரபரப்பான திரைக்கதை மூலம் ரோஜா மாளிகை எல்லோராலும் ரசிக்கும் படமாக உருவாகி உள்ளது. ஆடுகளம் நரேன் சர்ச் பாதராக வேடமேற்று அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.” என்றார்.

 

சின்னத்திரையில் ஜோடி போட்டு கலக்கிய மதுரை முத்து மற்றும் தேவதர்ஷினி இப்படத்தின் மூலம் முதல் முறையாக வெள்ளித்திரையில் ஜோடி போட்டு காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். இப்படம் வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

2861

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery