’கலகலப்பு 2’ படத்திற்குப் பிறகு ‘பார்ட்டி’, ‘ஜருகண்டி’, ‘நீயா 2’ ஆகியப் படங்களில் நடித்து வரும் ஜெய், அஜித் போல திரையில் மட்டுமே தெரிவாரே தவிர, அவரது படங்களில் நிகழ்ச்சியோ அல்லது பிற நிகழ்ச்சிகளிலோ கலந்துக்கொள்வதை தவிர்த்துவிடுகிறார். இருந்தாலும், அவர் பற்றிய சர்ச்சையான செய்திகள் மட்டும் அவ்வபோது வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
நடிகை அஞ்சலியுடன் காதல் வயப்பட்ட ஜெய், திடீரென்று தனது காதலில் ஏற்பட்ட விரிசலால் மது போதைக்கு ஆளாகிவிட்டதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றவாறு கடந்த ஆண்டு மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று மனுஷன் அலய்ந்துக் கொண்டிருந்தார். பிறகு பிரிந்த தனது காதலி மீண்டும் அவருடன் ஒன்று சேர்ந்ததால் நார்மல் மோடுக்கு மனுஷுன் வந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரிந்து சேர்ந்த ஜெய் - அஞ்சலி ஜோடி மீண்டும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு ஜெய் வாழ்த்து கூறவில்லை.
அதுமட்டும் அல்லாமல், இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கும் ஜெய், அஞ்சலியையும் மதம் மாற சொல்கிறாராம். அப்படி மதம் மாறினால் தான் திருமணம் என்பதில் அவர் பிடிவாதமாக இருப்பதால் தான், அஞ்சலி அவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...