தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சுமார் 10 வருடங்கள் முன்னணி ஹீரோயினாக இருந்த ஸ்ரேயா, ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரேயாவுக்கு தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு ரஷ்யாவில் குடியேற முடிவு செய்திருந்த ஸ்ரேயா, வரும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் முடிவில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கும் அவர், 20 படங்கள் நடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிப்பாராம்.
மேலும், தனது திருமண வாழ்க்கைகாக தனது சினிமா வாழ்க்கையை ஒரு போதும் இழக்க மாட்டேன், என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...