நடிகர் தனுஷுக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, நேற்று செய்தி பரவிய நிலையில், மற்றொரு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது.
’அஞ்சமின்றி’ வெற்றியை தொடர்ந்து விஜய் வசந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘மை டியர் லிசா’. திகில் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஞ்சன் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரவுடிகளுடன் விஜய் வசந்த் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாரத விதமாக விஜய் வசந்தில் கால் பள்ளத்தில் சிக்கியதால், அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் முறிந்தது.
உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் வசந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், படப்பிடிப்பை ரத்து செய்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது காலில் முறிவு ஏற்பட்டிருப்பதால், மூன்று வாரம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும், விஜய் வசந்த் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, ‘மை டியர் லிசா’ படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...