கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதற்கிடையே, நின்று போன தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தையும் அவர் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவான ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் தொடங்கி அங்கேயே நடத்தி வந்த கமல்ஹாசன், திடீரென்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். மேலும், இந்த படத்தில் முதன் முறையாக கமலுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கும், கெளதமிக்கும் பிரச்சினை வந்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன் இயக்குநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், இயக்குநர் பொருப்பையும் சேர்த்து கவனித்து வந்தார்.
இப்படி சில தடைகளோடு நடந்து வந்த ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பை ஒரு கட்டத்தில் முழுவதுமாக நிறுத்துவிட்டு, ’விஸ்வரூபம் 2’ பக்கம் தனது கவனத்தை செலுத்திய கமல்ஹாசன், அப்பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டார்.
இந்த நிலையில், ஷங்ககர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருக்கும் கமல், அதற்கு முன்பாக நின்றுபோன தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதனால், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...