தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் 2018 - 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் தலைவராக விஜயமுரளி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பெருதுளசி பழனிவேலும், பொருளாளாராக யுவராஜும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
துணைத் தலைவர்களாக கோவிந்தராஜ் மற்றும் ராமானுஜம் வெற்றி பெற்றுள்ளார்கள். இணைச் செயலாளர்களாக குமரசேன் மற்றும் ஆனந்த் வெற்றி பெற்றனர்.
வி.பி.மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில் முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
யூனியன் தேர்தலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கிரிதரன் நடத்தி கொடுத்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சினிமா பி.ஆர்.ஓ யூனியனுக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...