தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஏன் ஹாலிவுட் சினிமாவில் கூட பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது, என்று பல நடிகைகள் வெளிப்படையாக பேட்டி கொடுத்து வருகிறார்கள். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பட்டியல் ஆதரத்துடன் தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டி வருகிறார்.
இதற்கிடையே, படங்களில் நடிக்க தான் இப்படி என்றால், டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் பங்கேற்கவும் நடிகைகளை செக்ஸுக்கு அழைப்பதாக நடிகை ஒருவர் பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2, தெலுங்கில் நடிகர் நானி மூலம் தொகுத்து வழங்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில், தெலுங்கு நடிகை மாதவி லதா, ”பிக் பாஸ் 2 தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அணுகினார்கள். முதல் சீசனுக்கும் கூட என்னிடம் இன்டர்வியூ செய்தார்கள். அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.
இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எடுத்த இன்டர்வியூ முழுக்க எனக்கு அசவுகரியமாக இருந்தது. இன்டர்வியூவுக்கு பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மாதவி லதா பேட்டியில் அசவுகரியம் என்று கூறியதற்கு, அவரை செக்ஸுக்கு அழைத்திருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுகிறதா என்று மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருந்தாலும், நடிகை மாதவி லதா இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...