சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்து நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் செட் போட்டு படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டப் படபிடிப்பு சென்னையின் சில முக்கிய பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படம் தொடங்கும் போதே தயாரிப்பு தரப்பு அறிவித்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் தீபாவளிக்கு ‘விஸ்வாசம்’ வெளியாகது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் சர்க்கார் மற்றும் சூர்யாவின் NGK ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதனால் ’விசுவாசம்’ படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என சென்னையின் பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ரஜினியின் ‘2.0’ படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...