‘ஏஏஏ’ படத்திற்குப் பிறகு சிம்புவின் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என்ற சூழல் உருவான நிலையில், இயக்குநர் மணிரத்னம் தனது ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் மூலம் சிம்புக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
அவரது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்பு, அப்படத்தின் படப்பிடிப்பில் எந்தவித வம்பும் செய்யாமல் நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கியதோடு, காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் ஆதரவை பெற்றவர் அதன் மூலம் இனி தான் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித இடையூறும் செய்ய மாட்டேன், என்ற ரீதியில் சில வீடியோ பதிவிகளை வெளியிட்டார். இதையடுத்து சிம்புவைத்து படம் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முன்வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஷாலின் எதிரி என்று சொல்லும் அளவுக்கு செல்லும் இடம் எல்லாம் விஷாலை பற்றி குறை கூறுவது, அவரை திட்டுவது என்றே இருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாராம்.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிட்ட அணியில் முக்கிய நபராக விளங்கிய சுரேஷ் காமாட்சி, திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு விஷாலை விமர்சித்தே தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இவர் மைக் பிடித்து பேசினாலே விஷாலை விமர்சித்து தான் பேசுவார் என்பது, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி ஒட்டு மொத்த மீடியாக்களுக்கும் தெரியும்.
இதற்கிடையே, சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்திருக்கும் ‘மிக மிக அவசரம்’ படம் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் ரிலீஸ் ஆகாமல் பல ஆண்டுகளாக பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் சிம்புவை வைத்து படம் தயாரிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வெங்கட் பிரபு இயக்கத்தில்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...