Latest News :

தமிழ் சினிமாவை டார்கெட் செய்யும் மிஸ் இந்தியா!
Tuesday June-26 2018

தமிழ் சினிமாவில் உள்ளூர் பெண்கள் நடிப்பதைக் காட்டிலும் பிற மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தான் ஹீரோயினாக ஜொலிக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவை டார்க்கெட் செய்திருக்கும் புதுவரவு உபாசனா ஆர்.சி. இவர் முன்னாள் மிஸ் இந்தியா என்பது கூடுதல், இவருக்கு கூடுதல் பலம்.

 

‘88’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்த உபாசனா, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். 

 

சுமார் 80 விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் உபாசனா, கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக கால்பதித்தாலும், தற்போது முழு கவனத்தையும் தமிழ் சினிமா பக்கம் திருப்பியுள்ளார்.

 

சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர், பரதநாட்டியம் கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக்கொண்டிருக்கிறார். தான் ஒரு டான்ஸர் என்பதால், நடிகர் விஜயின் நடனத்திற்கு ரசிகையாக இருப்பவர், நடிகர் சித்தார்த்தையும் ரொம்ப பிடிக்கும் என்கிறார்.

 

சாப்ட்வேர் இன்ஜினியரான உபாசனா, கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்துக் கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வில்லா டூ வில்லேஜ்’ நிகழ்ச்சி தான் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது. நகர பெண்களை கிராமத்துக்கு அழைத்து சென்று நடத்திய அந்த நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்றுக் கொடுத்தது, என்று நினைவு கூறுபவர், அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ரியல் பைட்டர் என்ற பட்டப் பெயரும் கிடைத்தது என்று கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

 

அப்பா அம்மா பிறந்தது வங்காளம் என்றாலும், உபாசனா பிறந்தது குஜராத்தில். படித்தது கர்நாடகாவில். இப்போது வாழ்வது தமிழ்நாட்டில். ஆக இந்தியா முழுவதும் ஒரு ரவுட்ன் வர வேண்டும் என்பது தனது ஆசைகளில் ஒன்று என்று கூறுபவர், தற்போது தான் நடித்து வரும் ‘கருத்துக்களை பதிவு செய்’ தனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தரும் என்று நம்பிக்கையோடு கூறுவதோடு, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து, நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே தனது லட்சியம், என்றும் கூறுகிறார்.

Related News

2889

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery