அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அசுரவதம்’. இதில் ஹீரோயினாக நந்திதா சுவேதா நடிக்க, வில்லனாக எழுத்தாளர் வசுமித்ரா நடித்திருக்கிறார். வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்டு படம் குறித்து பேசிய சசிகுமார், “என்னுடைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எனது நண்பர் பிரேம் தான் இயக்குநர் மருதுபாண்டியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னிடம் கதை சொன்னவுடன் நானே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். அதற்கான வேலைகளை முடித்திருந்த நிலையில், லலித் என்னை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது தான் அவருக்கு இந்த படத்தைப் பற்றி கூறினேன். அவரும் கதை கேற்காமல் தயாரிக்க முன் வந்தார்.
இந்த படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், அவை கதைக்கு தேவைப்பட்டதால் தான் வைத்திருக்கிறோம். இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த கதையே எனக்கு பிடித்தது.
இந்த படத்தை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் விரைவாக லலித் சாருக்கு முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரே செட்டிலில் முடித்தோம், எனக்காக எனது படக்குழுவினரும் என்னோடு ஓடி வந்தார்கள். அவர்களது உழைப்பை மறக்க முடியாது.
இந்த படத்தின் ஹீரோயின் விஷயத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம். காரணம், இதில் இருக்கும் ஹீரோயின் வேடத்தில் யாரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள், அப்படி ஒரு கதாபாத்திரம், டூயட் பாடல்கள் என ஹீரோயினுக்கான எதுவும் படத்தில் இல்லை. அப்படி இருந்தும் நந்திதா கதாபாத்திரத்தை புரிந்துக்கொண்டு நடிக்க சம்மதித்தார். அதேபோல், வில்லன் வேடமும் ரொம்ப பவர் புல்லாக இருக்கும். ஒரு படத்தில் வில்லன் வேடம் பவர் புல்லாக இருந்தால் தான் ஹீரோ வேடம் நிற்கும். அந்த வகையில் இதில் வில்லனாக நடித்திருக்கும் வசுமித்ரா பேசப்படுவார். எனது வேடத்தை விட அவரது வேடம் தான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வில்லன் வேடத்திலும் யாரும் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. எனவே, இப்படி ஒரு கதாபாத்திரத்தை எழுத்தாளரான வசுமித்ரா புரிந்துக் கொள்வார் என்பதால் தான் அவரை அனுகினோம், அவர் கிடாரி படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு, இந்த படத்திலும் அவர் பிரமாதமா நடிச்சி இருக்காரு.
தயாரிப்பாளர் லலித், உங்கள் மீது நம்பிக்கை இருக்கு, நீங்கள் நினைத்ததை படமாக எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார், அதுவே பெரிய பயமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த அவர், எங்கள் பேனருக்கு முதல் படமே சிறந்த படமாக கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது தான் மகிழ்ச்சியாக இருந்தது.
இது நல்லவன், கெட்டவன் பற்றிய படம், இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்துகளை கொண்ட ஒரு கதை.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...