கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கிடையே அவ்வபோது சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் முதல் எலிமினேஷனும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் இறுதியில் பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னணி நடிகை ஒருவர் புதிதாக வர உள்ளார். அவர் வேறு யாருமல்ல பிக் பாஸின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தான்.
‘விஸ்வரூபம் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிக் பாஸ் வீட்டில் நடக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டதோடு, பாடல் ஒன்றுக்கு பிக் பாஸ் மேடையில் நடனமும் ஆடியுள்ளாராம். அதேபோல், ஆண்ட்ரியா, பூஜா குமார் உள்ளிட்ட படத்தில் நடித்த மற்றவர்களும் இதில் கலந்துக்கொண்டார்களாம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...