தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் மீது சங்கத்தின் நிலத்தை விற்று பணம் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நடிகர்கள் சங்க தலைவர் நாசர் தலைமையிலான நிர்வாகிகள் குழு, முன்னாள் நிர்வாகிகள் குழு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 செண்ட் நிலம் முறைகேடாக விற்கப்பட்ட விவகாரமும் ஒன்று. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், நிலம் விற்கப்பட்ட தொகை குறித்து ஆவணங்கள் ஏதும் இல்லை.
இதுகுறித்து சரத்குமார் மற்றும் ராதாரவி மீது, நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் பணம் கையாடல் புகார் அளித்திருந்தார். ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை விஷால் நாடினார்.
அதில் நிலம் முறைகேடாக விற்ற புகாரில் முகாந்திரம் இருந்தால், சரத்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த சூழலில் சரத்குமார், ராதா ரவி உள்ளிட்ட 4 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...