அனிமேஷன் படம் என்றாலே ஹாலிவுட் தான் என்ற நிலையை மாற்றும் விதத்தில், முதல் முறையாக இந்தியாவில் தயாரான இதிகாசக் கதையம்சம் கொண்ட 3டி அணிமேஷன் முழுநீளத்திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்.
உலகத்தின் முக்கியமான 4 அனிமேஷன் நிறுவனங்கள் பணியாற்றியுள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகியுள்ளது. இப்படத்தில் வெளிநாட்டவர் உதவிகள் இருந்தாலும், பெரும்பான்மையாக சென்னையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ராவணனுக்கும், ராமனுக்கு நடந்த யுத்தம் பற்றி நாம் அறிந்திருப்போம். அதே சமயம் இறுதிப் போரின் போது, ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற ராவணனை, ”இன்று போய் நாளை வா” என்று ராமன் அனுப்பிய பிறகு, என்ன நடந்தது என்பதை தான் இந்த திரைப்படம் சொல்கிறது.
அவமானத்தோடு போர்க்களத்தை விட்டு புறப்படும் ராவணன், பாதாள உலகில் வாழும் மயில்ராவணனை ஏவிவிட, பயங்கரமான மாய வித்தைகளை கற்ற மயில்ராவணன், ராமனையும், லட்சுமனையும் சிறைபிடிக்க, அவர்களை காப்பாற்ற களத்தில் இறங்கும் அனுமன் பல சாகசங்கள் செய்வதோடு, பல ஆபத்துக்களை மீறி எப்படி அவர்களை காப்பாற்றுகிறார், என்பதை நேர்த்தியான அனிமேஷனோடு இப்படம் விவரிக்கிறது.
சுற்றுச்சூழல் கணினி ஓவியம் என்ற துறையில் தலைமைப் பொறுப்பில் 10 வருடங்களுக்கு மேல் இங்கிலாந்தில் பணியாற்றிய டாக்டர் எழில்வேந்தன் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
முதன் முறையாக பத்துத் தலை இராவணன் புதுமையான ஒரு வடிவத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவரது பத்துத் தலைகளும் தனித்தனியே செயல்படுகிறது. கலிபோர்னியா அனிமேஷன் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர் ஒருவர் இந்த காட்சிகளை அனிமேட் செய்திருக்கிறார். தன் வேலையை சிறப்பாக முடித்தபின் ’இராவணன் தான் நான் பார்த்த வில்லன் பாத்திரங்களிலேயே சிறந்த வில்லன்!" என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் அனைத்து மூல ஒவியங்களும் பெரும்பான்மையான கதைப்பலகைகளையும் எழில் வேந்தன் தன் IPAD கொண்டு வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த ‘அனுமனும் மயில்ராவணனும்’ அனிமேஷம் திரைப்படம் வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...