ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர்கள் பலர் விரும்பினாலும், ரஜினிகாந்த் யாருடன் பணியாற்ற விரும்புகிறாரோ அவர்களுக்குத் தான் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிலையில், தனது ஒவ்வொரு படத்தின் ரிலிசிற்கு முன்பாகவோ, அல்லது ரிலிஸ் ஆன பிறகோ, “ரஜினிகாந்துக்கான கதை என்னிடம் இருக்கிறது, அவர் ஒகே சொன்னால் அவரை இயக்க நான் ரெடி” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறி வருவது வழக்கமாகிவிட்டது.
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் தனது ரஜினிகாந்த் ஆசை குறித்து முருகதாஸ் பேட்டியளித்துள்ளார். அதில், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், அவருக்கு கதை எழுதிவதில் பெரிய சிரமம் இருக்காது. ஒரு மாதத்தில் அவருக்கான நல்ல கதையை நான் எழுதிவிடுவேன். தற்போது என்னிடம் ரஜினிக்கான கதை இருக்கிறது. அவர் சம்மதித்தால் போதும்., என்று தெரிவித்துள்ளார்.
இப்படி ரஜினிகாந்த் படத்தை இயக்குவதற்காக, தன்னை தீவிர ரசிகன் என்று கூறி தொடர்ந்து பிட்டு போட்டு வரும் முருகதாஸுக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா, என்பது வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தான் தெரிய வரும்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...