ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படம் பஸ்ட் லுக் வெளியீட்டின் போதே பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் இருந்ததால், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தற்போது ‘சர்கார்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய்க்கு எச்சரிக்கை விடும் விதத்தில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
’சர்கார்’ படத்தின் பஸ்ட் லுக் வெளியான உடனே, அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்ததோடு, விஜய் சிகரெட் புகைக்காமலேயே ஸ்டைலாக தான் இருப்பார், அதனால் அவர் இதுபோல் நடிப்பதை தவிர்க்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பலதிலடி கொடுக்கும் வகையில், ”வீடுகளையும், வாகனங்களையும் எரிப்பதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்” என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர்.ராமதாஸ், “பழைய ராமதாஸாக நான் இருந்திருந்தால், விஜயின் சர்கார் படத்தை எந்த தியேட்டரிலும் ஓடாதபடி செய்ய, எனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன். ஆனால், இப்போது விஜய்க்கு வேண்டுகோள் தான் வைத்திருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
ராமதாஸின் இந்த மிரட்டல் தோனியிலான பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எந்த மாதிரியான பதிலடி கொடுப்பார்கள், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...