பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படமான ‘சஞ்சு’ பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நேற்று வெளியானது. வெளியான முதல் நாளிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் பல சாதனைகளை படைத்துள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் இளமை காலம், அவரது சினிமா எண்ட்ரி, காதல் மற்றும் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் கைதாகி சிறை சென்றது, என பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ.32 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இந்த வருடம் இதுவரை வந்த படங்களில் சஞ்சு தான் முதல் நாள் அதிக வசூல் என கூறப்படுகின்றது. மேலும், அமெரிக்காவில் சஞ்சு முதல் நாளே ரூ 4 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாம். உலகம் முழுவதிலும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தை பார்த்த தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் வெகுவாக பாராட்டியதோடு, படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் போது, கண் கலங்கியபடியே வந்தேன், என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...