வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகிறது, என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகளை ரத்து செய்யுமாறு, ஸ்டண்ட் யூனியன், தயாரிப்பாளர்கள் சங்கத்கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும், என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...