தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சட்டென்று உயர்ந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது பெயரிலேயே சொந்தமாக படங்கள் தயாரிக்கவும் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே அவர பினாமி நிறுவனம் என்று ஒன்று இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் நேரடியாகவே தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், காமெடி நடிகர் தம்பி ராமையா, தனது மகன் பூபதியை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் படம் ‘மணியார் குடும்பம்’ இப்படத்திற்கு இசையும் தம்பி ராமையா தான்.
இப்படத்தின் கதையை தம்பி ராமையா, சிவகார்த்திகேயனிடன் சொல்லிய போது, படத்தை நாணே தயாரிக்கிறேன், என்று சிவகார்த்திகேயன் கூறினாராம். ஆனால், அதை நிராகரித்த தம்பி ராமையா, வேறு தயாரிப்பாளர் முடிவாகிவிட்டார் தம்பி, என்று கூறி மறுத்துவிட்டாராம்.
சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தால் தம்பி ராமையாவின் படத்திற்கு பெரிய அளவில் மார்க்கெட் கிடைத்திருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் அவர் நடந்துக்கொண்ட விதம் குறித்து கோலிவுட்டில் அவரை பாராட்டி பேசி வருகிறார்களாம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...