கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறப் போகிறார் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கமலின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று பிக் பாஸில் இடம்பெறுகிறது. இதில் நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதி ஹாசன் கலந்துக்கொண்டு பாடல் ஒன்றை பாடுகிறார்.
ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சிக்கு வருவதால் பிக் பாஸ் போட்டியாளர்கள் குஷியடைந்திருப்பதோடு, அவரிடம் பேசவும் செய்திருக்கிறார்கள்.
அப்போது, கமல் போட்டியாளர்கள் குறித்து ஸ்ருதி ஹாசனிடம் கூறும் போது, இடையே குறிக்கிடும் டேனி, சார் நம்ம தான் அடிக்கடி பேசுறோமே, இன்று ஸ்ருதியிடம் பேசிக்கிறேன், என்று கூற, ஸ்ருதி ஹாசன் வெட்கத்தில் சிரித்துவிடுகிறார். உடனே கமலும், “எஞ்சாய் எஞ்சாய்...” என்று சொல்லி அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்கிறார்.
இன்று ஒளிபரப்பாக இருக்கும் இந்த எபிசோட்டில் மேலும் பல கலகலப்பான நிகழ்வுகள் நடந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...