ரஜினிகாந்தை வைத்து 11 ஹிட் படங்கள் கொடுத்த பிரபல இயக்குநர் ஆர்.தியாகராஜன் நெஞ்சுவலியால் இன்று மரணம் அடைந்தார்.
பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் மருமகனும், இயக்குநருமான ஆர்.தியாகராஜன், சென்னை போரூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
75 வயதாகும் ஆர்.தியாகராஜன், இன்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆட்டுக்கார அலமேலு’, ‘தாயில்லாமல் நானில்லை’ உள்ளிட்ட 28 படங்களை இயக்கியிருக்கும் ஆர்.தியாகராஜன், ரஜினிகாந்தை வைத்து ‘ரங்கா’, ‘தாய் வீடு’, ‘அன்புக்கு நான் அடிமை’ உள்ளிட்ட 11 வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...