ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ தமிழ் சினிமாவின் அதிக பொருட்ச் செலவில் உருவாகி வரும் என்ற பெருமையை பெற்றுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் 2018 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது.
ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால், அறிவித்த தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக நிறைவடைய எப்படியும் குறைந்தது 6 மாதங்கள் தேவை என்பதால், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின் போதே வெளியாகும், என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவலை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம், கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாவதால் தான் தீபாவளி வெளியீட்டிலிருந்து ஜனவரி வெளியீட்டுக்கு மாற்றினோம். ஜனவரி 25 வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும், என்று விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...