அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தாலும், திரைப்படங்களில் நடிப்பதில் தான் ரஜினிகாந்த் ஆர்வமாக இருக்கிறார். இதனால் அவரது அரசியல் பிரவேசம் இன்னமும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், அவரது மனைவி லதா தற்போது அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது, ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து அரசியல் குறித்து பேசியிருக்கிறார். இதனை ராஜ்தாக்ரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த பால்தாக்ரேவை தனது கடவுள் என்று ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரஜினிகாந்தின் மனைவி அவரது குடும்பத்தாரை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இன்னம் அரசியல் கட்சியே தொடங்கவில்லை, அதற்குள்ளாகவே ரஜினியின் குடும்பத்தார் அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார்களே, என்று ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளே சற்று அதிர்ச்சியாகியுள்ளார்களாம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...