Latest News :

பயப்படாம கட்டிப்புடி - நடிகருக்கு ஊக்கம் கொடுத்த ராய் லட்சுமி!
Monday July-02 2018

சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்' படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல்  என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர்  ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான 'பெங்களூரு நாட்கள்' படத்தில் ராய் லட்சுமியின் காதலராக நடித்தவர். 

மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள், ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன். 

 

எனக்கு இயல்பிலேயே  கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம். என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள். அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால்  'புழல்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

 

அதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் 'பெங்களூர் நாட்கள்' பட வாய்ப்பு கிடைத்தது.

 

அந்தப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர்  நட்பு  கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய 'x வீடியோஸ்' படத்திலும் வாய்ப்பு கிடைத்தது, என்கிறார் அர்ஜுன்.

 

’பெங்களூர் நாட்கள்’ படத்தில்  நடிக்கவேண்டும் என சொன்ன போது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நானோ  நடிப்புக்கு புதியவன். அதிலும் ராய் லட்சுமியை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று வேறு காட்சிகள் இருந்தது. ஆனால் ராய் லட்சுமி தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார். 

 

அதுமட்டுமல்ல இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன். இப்போது 'x வீடியோஸ்' படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்சசியாக இருக்கிறது, என்கிற அர்ஜுன், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்

Related News

2934

”’டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய திரைப்படம் அல்ல” - இயக்குநர் எஸ்.சஷிகாந்த்
Sunday March-16 2025

ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! - பூஜையுடன் தொடங்கியது
Sunday March-16 2025

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

Recent Gallery