Latest News :

அறிவியல் திரில்லர் படமாக உருவாகும் ‘நகல்’
Monday July-02 2018

எ3ஸ் 2 எஸ் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன் தயாரிப்பில், ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘நகல்’. அறிவியல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக சிவசக்தி நடிக்கிறார். மும்பை மாடல் ரிஷ்மா நாயகியாக நடிக்கிறார். இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, எப்.எஸ்.பைசல் இசையமைக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சிவா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மணி வர்மா, ஷரன் சுந்தரம் ஆகியோர் கலையை நிர்மாணிக்கிறார்கள்.

 

மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

 

இன்று பூஜையுட இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூலை 9 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற இருக்கிறது. 75 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும், மீதமுள்ள 25 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ள படக்குழு பாடல்களை ஊட்டியில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

Related News

2935

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery