பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யா பாலன், தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள் தான். அந்த வகையில், மீண்டும் தென்னிந்திய சினிமாவில் வித்யா பாலன் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருக்கிறது.
‘என்.டி.ஆர் பயோபிக்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை, பிரபல நடிகரும், என்.டி.ஆர்-ன் மூத்த மகனுமான நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரித்து, என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யாபாலன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிப்பதால், இப்படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
கிரிஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன், சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...