Latest News :

300 தியேட்டர்களில் ரிலிஸாகும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’
Wednesday July-04 2018

நடிகர் கார்த்திக்கின் மகன், மணிரத்னத்தின் படம் மூலம் அறிமுகமான ஹீரோ என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் பயணிக்கும் கெளதம் கார்த்திக், மஹாதேவகி, முரட்டு குத்து என்று ஒரு மார்க்கமான படங்களில் நடித்து தனது இமேஜை கொஞ்சம் டேமஜ் செய்துக்கொண்டார்.

 

இதற்கிடையில், டேமஜான அவரது மொத்த இமெஜையும் சரி செய்யும் வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் என்ற அடையாளத்தோடு இப்படத்தின் ஆரம்பம் இருந்தாலும், படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் என்று படம் சம்மந்தமாக வெளியான கண்டண்ட் ஒவ்வொன்றும் தரமானதாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்துடன், படத்தின் ஹீரோயின் ரெஜினா கஸன்ராவின் கவர்ச்சியான பாடல் காட்சியும், வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திர சஸ்பன்ஸும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

இதற்கிடையே, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருப்பதால், தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கெளதம் கார்த்தின் படங்களிலேயே இவ்வளவு தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திரு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சமீபத்தில் தொடர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் சாம் சி.எஸ் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செழியன், கிரியேட்டிவ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ வரும் ஜூலை 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related News

2954

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery