‘பார்ட்டி’ படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த நிலையில், சிம்பு படம் முடிந்த பிறகு கிரிக்கெட் சம்மந்தமான படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க போகிறாராம். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்து பேசியிருக்கும் வெங்கட் பிரபு, இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக அளவில் சுழற்பந்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...