தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருப்பவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இத்தனை ஆண்டுகள் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, கடந்த ஆண்டு தான் முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடித்தார். நிவின் பாலி ஹீரோவாக நடித்த ‘ஹே ஹூட்’ என்ற படத்தின் மூலம் திரிஷா மலையாள சினிமாவில் எண்ட்ரியானார்.
இந்த நிலையில், தனது முதல் மலையாளப் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை திரிஷா வென்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான நார்த் அமெரிக்கா விருது வழங்கும் விழா டொரண்டோவில் நடைபெற்றது.
இதில், ’ஹே ஜூட்’ படத்திற்காக திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானுக்கு சிறந்த பாப்புலர் நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழாவில் திரிஷா, துல்கர் சல்மான், மஞ்சு வாரியர், பார்வதி, விஜய் யேசுதாஸ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...