நாளை மறுநாள் (ஆக.24) வெளியாக உள்ள அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அஜித் ரசிகர்கள் தலயின் புதிய படத்தின் ரிலீஸை வித்தியாசமான வகையில் கொண்டாடி வருகிறார்கள்.
பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விவேகம்’ படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். ஆம், சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் டீசர் ‘விவேகம்’ படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக, விவேகம் திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களிலும் ‘வேலைக்காரன்’ படத்தின் டீசர் திரையிடப்படும்.
கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்ட அஜித் படத்துடன் நம்ம படத்தின் டீசரை வெளியிட்டார், மக்களிடம் சுலபமாக சென்றடையலாம் என்ற நந்திரத்தோடு, இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கும் ‘வேலைக்காரன்’ தயாரிப்பாளர் எஸ்.டி.ராஜா, தனது அனைத்து படங்களுக்கும் பணத்தை வாரி வாரி இறைத்து செலவு செய்துக் கொண்டிருக்க, அஜித்துடன் சிவகார்த்திகேயனை இணைக்க எத்தனை கோடி செலவு செய்தார், என்பது குறித்து கோடம்பாக்க டிடேக்டிவ்கள் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...