மாபெரும் வெற்றிப் பெற்ற தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குவதோடு தனது பி ஸ்டுடியோஸ் சார்பில், இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் பாலா தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஹீரோயின் முடிவாகததால், துருவ் சம்மந்தமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ‘காலா’ புகழ் ஈஸ்வரி ராவ் நடிப்பதாக தகவல் வெளியானது. அதைபோல், பிக் பாஸ் ரைசா ஒரு குத்துப்பாட்டு நடனம் ஆடியிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘சில்லுனு ஒரு காதல் கதை’ படத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா, ‘வர்மா’ படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் செய்தியாக பரவலாக பரவிய நிலையில், பெங்காலி நடிகை ஒருவர் ‘வர்மா’ படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குநர் பாலா தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்திருக்கும் மேகா என்பவர் ‘வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் கைதேர்ந்தவரான மேகா நடிப்பில் மட்டும் இன்றி நடனத்திலும் வல்லவராம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...