கார்த்திக் - கெளதம் கார்த்திக் முதன் முறையாக சேர்ந்து நடித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ நாளை (ஜூலை 6) உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதிஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ் இசையைத்திருக்கிறார்.
இந்த வாரம் வெளியாக கூடிய படங்களில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் என்பதால் மிஸ்டர் சந்திரமெளலிக்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில், படத்தை பெரிய பொருட்ச்செலவில் தயாரித்தது போல, ரிலிஸும் பெரிய அளவில் இருப்பதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள ஜி.தனஞ்செயன் தனது படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் திரு பற்றி அவர் கூறுகையில், “அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.” என்றார்.
தொழில்நுட்ப குழுவை பற்றி பேசியவர், “ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அவரது முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும். நிச்சயமாக, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தங்களோடு எடுத்து செல்வார்கள். எடிட்டர் சுரேஷ் டிஎஸ் குழுவுடன் இணைந்து பணிபுரியும் ஒரு அற்புதமான கலைஞர். அவரது திறமையான எடிட்டிங், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும். மிஸ்டர் சந்திரமௌலி திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க முக்கியமான ஒரு காரணம் கலை இயக்குநர் ஜாக்கி. குறிப்பிட்ட பட்ஜெட்டில், சிக்கலான சூழல்களின் கீழ் பணிபுரிந்தாலும் கூட சிறந்த அவுட்புட் கொடுக்க அவர் தயங்கவில்லை.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கியமான ஒரு அம்சம் சவுண்ட். படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் ரத்னத்துடைய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பேசப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜெயலட்சுமியின் ஆடைகள் மற்றும் ஆடை வடிவமைப்பு படத்தை இன்னமும் அலங்கரித்து, வண்ணமயமாக்கி உள்ளன. இந்த படத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதிரடி சண்டைக்காட்சிகள். 'ஸ்டண்ட்' சில்வா இல்லையென்றால், இந்த மாதிரி ஒரு அற்புதமான அவுட்புட் நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்.
கார்த்திக் சார் இல்லாவிட்டால், இந்த படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. இது தந்தை-மகன் என்ற தனித்துவமான விற்பனை புள்ளியை தழுவி நிற்கிறது. கெளதம் கார்த்திக் ஒரு தொழில்முறை நடிகர், அவர் நடித்துள்ள பாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்படி கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது நடிப்பை வெளிப்படுத்த, அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களை செய்தார். அது படத்தின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது. மேலும் கார்த்திக் சார் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கௌதம் கார்த்திக் தான். ஒட்டுமொத்த குழுவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் இருந்தாலும், ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்கி முழு ஆதரவு கொடுத்தார். அவர் பணிபுரியும் எல்லோரையும் மதித்து, இயல்பாக்கி வைத்திருந்தார். எந்தவிதமான அழுத்தங்களையும் அல்லது தொந்தரவுகளையும் உருவாக்கவில்லை, இது ஒரு வகையான அரிய இயல்பு. திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
பல படங்களில் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் போன்ற ஒரு நடிகை, எங்கள் படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹைலைட்டான விஷயம் அது. நடிகர் சதீஷ், வெறும் நடிகராக மட்டுமல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு எல்லா வகைகளிலும் தன் பங்களிப்பை தருபவர். மகேந்திரன் சார் போன்ற ஒரு லெஜண்ட் உடன் பணிபுரிவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மறக்க முடியாத தருணம். ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அகத்தியன் சாரின் வருகையும் இந்த திரைப்படத்திற்கான கூடுதல் மரியாதை. சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள கதாபாத்திரம் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மைம் கோபியின் அர்ப்பணிப்பு அசாதாரணமானது மற்றும் அவரது கதாபாத்திரம் மேலும் சவால்களை உள்ளடக்கியது, மிகவும் நன்றாக வந்திருக்கிறது. விஜி சந்திரசேகர் மற்றும் வெங்கட் சுபா ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டக்கூடியது.
இவர்களின் சீரிய முயற்சி மற்றும் கடின உழைப்பு தந்த பலன் தான், இன்று இந்த படத்துக்கு 300 காட்சிகள் என்ற செய்தி. ரசிகர்கள் உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை கண்டு களிக்கலாம்.” என்று தனக்கே உரிய தன்னம்பிக்கையோடு கூறினார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...