கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட திரைப்படமாகவும் திகழ்ந்தது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகள் சிலவற்றிலும் ‘மெர்சல்’ படம் அமோக வசூல் ஈட்டியது.
இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது விஜயும், அவரது படங்களும் இந்திய அளவில் ரீச் ஆகி வருகிறது.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் வியாபாரம் தொடங்கியிருப்பதாகவும், இதுவரை ரூ.105 வரை வியாபாரம் பேசப்பட்டு வருதாகவும் கூறப்படுகிறது.
பஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியிருக்கும் ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய வியாபாரம் பேசப்பட்டிருப்பதை அறிந்து ஒட்டு மொத்த கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்திருக்கிறதாம். அதே சமயம், வரும் நாட்களில் இந்த தொகை இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், கடந்த தீபாவளிக்கு எப்படி மெர்சல் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியதோ, அதுபோல இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘சர்கார்’ கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாகிறதோ, அதே அளவுக்கு பல அதிரடியான காட்சிகளோடு, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு பரபரப்பான திரைக்கதையோடும் உருவாவதாக சிலர் கூறியுள்ளனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...