கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்கள் திரிஷாவின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கின்றன.
இதற்கிடையே, அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் திரிஷா, தனக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ரொம்ப பிடித்தமான நகரம் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், ”A table for two ❤️❤️” என்று திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு அர்த்தம், திரிஷா காதலில் விழுந்துவிட்டார் என்பதே, என்று நெட்டிசன்கள் கூறி வருவதோடு, அந்த காதலர் குறித்த விபரங்களையும் திரிஷாவிடம் கேட்டு வருவதோடு, திரிஷா அடிக்கடி வெளிநாடு செல்வதால், அவரது காதலர் வெளிநாட்டு வாலிபராக இருப்பார், என்றும் கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே, திரைப்பட தயாரிப்பாளரும் சென்னை தொழிலதிபருமான வருண் மணியன் என்பவரை காதலித்த திரிஷாவுக்கு அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென்று திருமணம் நின்றுவிட்டது.
இந்த நிலையில், திரிஷா மீண்டும் காதலில் விழுந்திருப்பதால் அவரது ரசிகர்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...