Latest News :

கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து உருவாகும் ‘தோனி கபடி குழு’
Thursday July-05 2018

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில், கிரிக்கெட் மற்றும் கபடி என இரண்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்திற்கு ‘தோனி கபடி குழு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 

‘மைடியர் பூதம்’ தொடரில் நடித்த அபிலாஷ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

 

படம் குறித்து ஹீரோ அபிலாஷ் கூறுகையில், “’தோனி கபடி குழு’ என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது. நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது. என்னை தவிர்த்து படத்தில் 8 கதாபாத்திரங்கள் உள்ளன. இயக்குனர் ஏ.வெங்கடேஷின் துனை இயக்குனரான பி.ஐயப்பன் இப்படத்தை இயக்குகிறார்.” என்றார்.

 

இயக்குநர் பி.ஐயப்பன் படம் குறித்து கூறுகையில், “இக்கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். நான் பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிகெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது.” என்றார்.

 

நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கை கபடி விளையாட்டு வீரர்கள் சிலர் நடிக்கிறார்கள். ‘பட்டம் போலே’ படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார். மேலும் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், சி.என்.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.  

 

இப்படத்திற்கு ரோஷன் ஜோசப் இசையமைக்க, பின்னணி இசையை மகேந்திரன் அமைக்கிறார். ராசா பாடல்கள் எழுத, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகேயன் படத்தொகுப்பை கவனிக்க, ஏ.சி.சேகர் கலையை நிர்மாணிக்கிறார். கே.மனோகரன் உடைகளை வடிவமைக்கிறார்.

 

வரும் ஜூலை 7 ஆம் தேதி டோனியின் பிறந்தநாளன்று தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம், கல்லக்குறுச்சி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது. படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

Related News

2968

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
Tuesday March-18 2025

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது...

”’டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய திரைப்படம் அல்ல” - இயக்குநர் எஸ்.சஷிகாந்த்
Sunday March-16 2025

ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! - பூஜையுடன் தொடங்கியது
Sunday March-16 2025

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...

Recent Gallery