தமிழ் மட்டும் இன்றி இந்திப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் தனுஷ், ஹாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். நடிப்பது மட்டும் இன்றி திரைப்படம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தனது ரசிகர் மன்றத்தை சரியான முறையில் நிர்வகிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு படியாக தனது ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளை மாற்றம் செய்ததுடன், பிரபல தமிழ் சினிமா இயக்குநரை தனது ரசிகர் மன்றத்தின் தலைவராக நியமித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘திருடா திருடி’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்பிரமணிய சிவா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிய சுப்பிரமணிய சிவா, பிறகு ஜீவாவை வைத்து ‘பொறி’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பிறகு அமீர் இயக்கி நடித்த யோகி படத்தில் பணிபுரிந்தவர் தனுஷை வைத்து‘சீடன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது ‘வெள்ளை யானை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் சுப்பிரமணிய சிவாவை, தனது ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராக தனுஷ் அறிவித்துள்ளார். அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற செயலாளராக பி.ராஜா என்பவரை நியமித்துள்ளார்.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது...
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...