பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத்தும், ஷாரிக்கும் ஒரே லூட்டிஸாக திரிகிறார்கள். ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை இவர்கள் இருவரும் விடுவதாக இல்லை. இவர்களது பெட்டில் அடிக்கடி படுத்துக்கொள்ளும் இவர்களது செயல் சில நேரங்களில் முகம்சுளிக்கவும் வைக்கிறது.
இந்த நிலையில், ஷாரிக்கை உனது பெட்டில் படுக்க அனுமதிக்காதே, என்று ஐஸ்வர்யாவுக்கு மும்தாஜ் அட்வைஸ் சொல்லியிருக்கிறார்.
எவ்வளவு நட்பு இருந்தாலும், அன்பு பாசம் இருந்தாலும் சில விஷயங்கள் தப்பு என்று ஐஸ்வர்யாவிடம் கூறும் மும்தாஜ், ஒரு ஆம்பள வந்து பொண்ணு பெட்டில் படுப்பதை பார்த்து எனக்கு அசவுகரியமாக இருக்கிறது, என்று அவரிடம் கூறுகிறார்.
ஷாரிக் இந்த நான்ஸ்சென்ஸ் பண்ணாத உன் அறைக்கு போ என்று நான் கத்த ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நான் சத்தம் போட்டிருந்தால் எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்று மும்தாஜ் கூறியுள்ளார்.
ஷாரிக் என்னுடன் வந்து பெட்டில் படுத்தாலும் எதுவும் செய்வது இல்லை நல்ல பையன் என்கிறார் ஐஸ். அதற்கு மும்தாஜோ அவன் நல்ல பையன் தான். ஆனால் ஃபீலிங்ஸ் இருந்தால் சில நேரம் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்கிறார்.
மும்தாஜ் சொல்வதை பொருமையாக கேட்டுக்கொண்ட ஐஸ்வர்யா, ஷாரிக்கை தனியாக அழைத்து மும்தாஜ் பற்றி குறை கூறுவதோடு, ஷாரிக்கிடம் விஷயத்தையே மாற்றி சொல்கிறார். இப்படி போகும் இந்த வாரம் எப்பிசோட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில் சேலம் வேங்கை அய்யனா தயாரிப்பில், அம்மா ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘வெட்டு’...
இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில், எஸ்...
சென்னையில் நடைபெற இருக்கும் பிரமாண்டமான நேரை இசை நிகழ்ச்சி மூலம் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ராப் பாடகர்கள் பால் டப்பா மற்றும அசல் கோளாறு ஆகியோருடன் கைகோர்த்துள்ளார்...