நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றி மூலம் நயந்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தை இயக்கிய கோபி நயினாரின் அடுத்தப் படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர் ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்த இயக்குநர் கோபி நயினார், அறம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயார் செய்துவிட்டேன், ஆனால் எனது அடுத்த படமாக அது இருக்காது, வேறு ஒரு கதையை எடுத்த பிறகே அறம் இரண்டாம் பாகத்தை எடுப்பேன், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், வட சென்னையையும், அங்கு இருந்த பிரபல பாக்ஸர்களின் வாழ்வியலையும் தனது அடுத்தப் படமாக கோபி நயினார் எடுக்க இருக்கிறாராம். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் தனது கதை என்று கோபி நயினார் கூறியிருந்தார். மேலும், மெட்ராஸ் படத்திற்குப் பிறகு ரஞ்சித் சூர்யாவை வைத்து இயக்க இருந்த படமும் பாக்ஸிங் பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெற இருக்கும் பிரமாண்டமான நேரை இசை நிகழ்ச்சி மூலம் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ராப் பாடகர்கள் பால் டப்பா மற்றும அசல் கோளாறு ஆகியோருடன் கைகோர்த்துள்ளார்...
இன்புஃளன்சர்ஸ் (Influencers) என்று சொல்லக் கூடிய சமூக வலைதளப்பக்க கலைஞர்களை ஒன்றிணைத்து South Indian Social Media Influencers Association (SISMIA) என்ற சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது...
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது...