தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று அனைத்து மொழி சினிமாக்களிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக நடிகைகள் பலர் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதே சமயம் பேசும் நடிகைகள் பலர் தங்களுக்கு இதுவரை அப்படிப்பட்ட அனுபவம் ஏற்படவில்லை என்றும் கூறி மழுப்பிவிடுகிறார்கள்.
ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டும் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்து மறைமுகமாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில், மலையாள டிவி சீரியல் இயக்குநர் உன்னி கிருஷ்ணன், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அந்த சீரியலில் நடிக்கும் பிரபல டிவி நடிகை நிஷா சாரங் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘உப்பும் மொளகும்’. 650 எபிசோட்களை கடந்திருக்கும் இந்த சீரியலில் 5 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருபவர் நிஷா சாரங். இவர் சீரியல் இயக்குநர் உன்னி கிருஷ்ணன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “உன்னி கிருஷ்ணன் நெடுங்காலமாகவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரின் செயல்கள் பிடிக்கவில்லை என்பதை நான் தெரிவித்தும் அவர் என்னை விடுவதாக இல்லை.
தான் எதிர்ப்பார்த்தது கிடைக்காது என்பது தெரிந்ததும், உன்னி என்னை செட்டில் அசிங்கமாக திட்ட தொடங்கினார். செட்டில் மட்டும் அல்லாமல் போனிலும் அசிங்கமாக மெசஜ் அனுப்புகிறார். அவரது தொல்லை தாங்காமல் நான் பலமுறை அழுதுள்ளேன். அவரது செயல் குறித்து சக நடிகர்களும் அவரை பல முறை எச்சரித்துள்ளனர். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்து வந்தார்.
செட்டுக்கு தினமும் குடித்துவிட்டு வருபவர் என்னிடம் அசிங்கமாக நடக்கவும் அவ்வபோது முயற்சி செய்து வந்தார்.
நடிப்பு தான் என் தொழில், இதில் கிடக்கும் வருமானத்தில் தான் என் குடும்பம் நடக்கிறது. என் மகளின் திருமணத்திற்காக அனிஅத்து அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு அந்த சீரியலில் நடித்து வந்தேன். ஆனால், பொய்யான குற்றம் சாட்டி என்னை அந்த சீரியலில் இருந்து உன்னி நீக்கிவிட்டார். அந்த தொடரில் இருந்து உன்னியை நீக்கினால் தான் நான் மறுபடியும் அந்த தொடரில் நடிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில், எஸ்...
சென்னையில் நடைபெற இருக்கும் பிரமாண்டமான நேரை இசை நிகழ்ச்சி மூலம் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ராப் பாடகர்கள் பால் டப்பா மற்றும அசல் கோளாறு ஆகியோருடன் கைகோர்த்துள்ளார்...
இன்புஃளன்சர்ஸ் (Influencers) என்று சொல்லக் கூடிய சமூக வலைதளப்பக்க கலைஞர்களை ஒன்றிணைத்து South Indian Social Media Influencers Association (SISMIA) என்ற சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது...