மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது உறுதியான நிலையில், அப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
’அதிரடி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தலைப்பு குறித்து அறிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, இன்று (ஜூலை 10) 11 மணிக்கு தலைப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் தலைப்பு ‘மாநாடு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டிஆர்-ன் ‘மாநாடு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் சப் டைடிலாக ‘இது வெங்கட் பிரபு அரசியல்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...