வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்றி அறிவிக்கப்பட்ட இந்த தலைப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, அரசியலிலும் சற்று பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு விரைவில் அரசியலில் இறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தலைப்பு அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுத்து வரும் சிம்பு, கடந்த சில நாட்களாக ‘சர்கார்’ படத்திற்கு எதிராக பேசி வரும் அன்புமணி ராமதாஸுக்கு சவால் விடுக்கும் விதத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் புகைப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் வெளியான விஜயின் ‘சர்கார்’ படத்தையும் கடுமையாக விமர்சித்தார்கள்.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சிம்பு, ”திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் புகைப்பது குறித்து அன்புமணி அவர்கள் சினிமா நடிகர்களுடன் பொது மேடையில் பேச ரெடி என்றார், நானும் தற்போது ரெடி, அவருடன் இது குறித்து ஒரு பொது மேடையில் பேச விரும்புகின்றேன்.” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
’மெர்சல்’ படத்தின் மூலம் மிகப்பெரிய சர்ச்சையை எதிர்கொண்ட நடிகர் விஜயே, பா.ம.க தலைவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து போன நிலையில், அவர்களை நேரடியாக எதிர்க்கும் விதத்தில் சிம்பு சவால் விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...